Friday, 30 December 2011

லோக்பால் RSS /BJP மற்றும் ஆளும்வர்கத்தின் செல்லபில்லையா !?

லோக்பலை பற்றிய என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு முன் லோக்பால் என்றால் என்ன என்பதை பார்போம்? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.

ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது

பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம்  லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்

டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை  தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது

ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான்  நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது

இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா  பேச முன்வரவேண்டும்

Friday, 23 December 2011

நீங்கள் உலகில் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி உங்களுக்கும் இந்த எச்சரிக்கை !!!


எச்சரிக்கை செய்யபட்டது அவனுக்கு அலச்சியபடுதினான் !
உறுதி செய்யபட்ட உண்மை என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!
நிழல் போல தொடர்ந்து வரும் என்று சொல்லபட்டது அவனுக்கு அலச்சியபடுத்தினான்!

திரைப்படம் பார்த்துவிட்டு இறைபள்ளியை கடந்து சென்ற பொழுது அவன் முன் தோன்றியது அது உள்ளம் படபடக்க,குருதி கொந்தளிக்க பரிதபதக்குரிய அவன் வினவினான் நீ யார் ?

உண் நிழல் போல் தொடர்ந்து வந்த நான் இன்று உன் முன் நிற்பதற்காக உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது நான்தான் உன்னுடைய மரணம் ! என்று சொன்னவுடன்
இறுதி முச்சு இழுபதற்கு முன் எதிரே தோன்றிய இறை பள்ளியின்
நுழைவாயில் எழுதப்பட்ட ஒரு வாசகத்தை கண்டான்.....

உங்களுக்காக தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்....
islam

நன்றி :சகோ டைரி 

தேடிவச்சவனுக்கு லாபம் தேவை உள்ளவனுக்கு சாபம்- தங்கம் என் பார்வையில்

நிமிடத்துக்கு நிமிடம் மாறுவது  பச்சோந்தி என்பது  பழமொழியில் ஒன்று ,அப்போ புதுமொழி  என்னனு கேட்டா வேற என்னத்த சொல்லுறது  தங்கம்தான்  "தேடிவச்சவனுக்கு லாபம் தேவை உள்ளவனுக்கு சாபம்" என்று சொல்லும் அளவுக்கு நம்மை ஆட்டிவைகிறது தாறுமாறாக ஏறும் தங்கத்தின்  விலை.

இன்பத்தையும் துன்பத்தையும் தரும் குழந்தைகளை சிலர் இதனால்தான் என் தங்கமே என்று கொஞ்சுகிரர்களோ என்னோவோ சிலர் மனைவிகளையும் அப்படி அழைப்பதுண்டு !ஆக மனிதர்களில் ஒருசாராருக்கு இன்பத்தையும் மற்றவர்களுக்கு துன்பத்தையும் தரும் தங்கம் ஏன் இப்படி விலை ஏறுகிறது, தங்கத்தின் வகை என்ன ,ஆதி மனிதன் எப்படி தங்கத்தின் தரத்தை பிரித்து எடுத்தான் என்ற பல கேள்விகளின்  என் தேடலின் முடிவே இப்பதிவு

1920-ஆம் அண்டு ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் 21-ருபாய் தான் இதே ஒரு பவுன் தங்கம் 2008-ல் 10,000-ரூபாய்க்கு விற்றது. 2011-ல் 21,000-ரூபாய்க்கு விற்கிறது இந்த அளவிற்கு தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் கூறும் காரணமோ, உற்பத்தி அளவை காட்டிலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பயன்பாடு அல்லது தேவை, அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி என்பார்கள் இப்படி பொதுவான காரணங்கள் பல இருந்தாலும் இவற்றை விட முக்கியமான காரணமாக இருப்பது முன் பேரம் ஆகும். அதாவது முன் பேரத்தின் அடிப்படையில் தங்கத்தில் முதலீடு செய்வது இப்போது அதிகரித்துவிட்டது. இதனடிப்படையில் முதலீடு செய்பவர்கள் தங்கத்திற்கு முழுப்பணத்தையும் கொடுத்து வாங்காமல் குறைந்த பணத்தை முதலீடு செய்து சூதாட்டம் போல் தங்கத்தை வாங்கி விற்பதால் தங்கத்தின் விலை நிமிடத்திற்கு நிமிடம் உயர்கிறது.gold

மிக தூய்மையான தங்கத்தை ஒன்றும் செய்ய இயலாது, தங்கத்துடன் செம்பு சேர்த்துதான் ஆபரணம் செய்கிறார்கள். தூய தங்கம் 100 டச் ஆகும், 24 காரட் தங்கம் என்பது 99.999 டச் ஆகும். 22 காரட் என்பது 88-லிருந்து 90-டச் வரை இருக்கும். 916 தங்கம் என்றால் அது 91.6 டச் அளவு தூய்மையான தங்கம் ஆகும் 22 காரட்டில் கிடைக்கும் அதிகபசட்ச தூய தங்கம் அதுதான்.

கே.டி.எம் என்ற முத்திரை பற்றியும் நாம் கேள்விபட்டிருப்போம். K.D.M என்பது தங்கத்தை நகையாக வார்க்கும் போது செம்புக்கு மாற்றாக பயன்படுத்தபடும் ஒருவகை பொடியை குறிக்கிறது. இந்த 'கே.டி.எம்' பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. '22 கேரட்', 'கே.டி.எம்' போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால் அந்த தங்கம் தூய்மையானது என்று கூறிவிட முடியாது. ஆனால் ‘ஹால்மார்க்' முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. 'ஹால்மார்க்' என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் பொதுவாக நம்பிக்கைக்கு உரியவை என்று சொல்லப்படுகிறது.எது எப்படியோ காசு கையில் இருந்தால் ஒன்னு பொன்னுல போடு அல்லது மண்ணுல போடுன்னு சொன்னவங்க வாயில சீனியைத்தான் போடணும்

தங்கத்தை போல மதிப்பு மிக்க உலோகம் உள்ளதா என்றால் அனைவரின் நினைவிலும் வரும் ஒரே ஒரு உலோகம் பிளாட்டினம் தான். அதையும் தாண்டி இன்னொரு உலோகமும் உள்ளது,அது என்னனு உங்களின் யாரவது சொன்னால் நிச்சயம் தபுறுக் இருக்கிறது,ஆம் அன்பர்களே நான் சொல்லும் இடத்திற்கு அதிரையில் காலை எழு மணிக்கு வந்தால் கை நிறைய தபுறுக்  கிடைக்கும்,ஒரு சின்ன க்குளு கொடுக்கிறேன் அந்த இடம் தக்கவ பள்ளி அருகே உள்ளது .....

Mohamed Rafeek Taj 

Saturday, 19 November 2011

அப்துல் கலாமை அமெரிக்கர்கள் மட்டும் அவமானம் படுத்தினார்களா ?

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க சென்ற முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவமானம் படுத்த பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த்ததை அடுத்து உயர்மட்ட அளவிலான பிரச்சனையாக எழுப்பும் மாறு வெளியுறவு துறை அமைச்சர் அமெரிக்காவுக்கான இந்திய தூதரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்

அமெரிக்க சட்டம் இதில் என்ன சொல்லுகிறது என்பதை பார்ப்போம்
, ட்வின் டவேர் தாக்குதலுக்கு பிறகு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட விமானத்துக்கான பாதுகாப்பு சட்டத்தில் அமெரிக்காவுக்கு வரக்கூடிய பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் அனைவருக்கும் பயணிகள் சோதனையில் இருந்து எந்த விளக்கும் அளிக்க கூடாது,அந்த வகையில் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் கேரி ,முன்னால் பாதுகாப்பு துறை அமைச்சர் ரம்ஸ் பெல்ட்,உலகவங்கி பிரசிடன்ட் போன்றவர் எல்லாம் சாதாரண பயணிகளை போல் சோதனை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன் (அதாவது சூ ,பெல்ட் ,வல்லெட் போன்ற உடமைகளை சோதிக்கும் பொழுது )
 
ஆனால் இந்த அளவுக்கு விவகாரம் பெரிதாக போவதற்கு காரணம் சோதனை முடித்த பின் விமானத்தில் அமர்ந்து இருந்த அப்துல் கலாமை மிண்டும் சோதனைக்கு உட்படுத்தியது,இது வேண்டுமென்றே திட்டமிட்டு அவமானம் படுத்த வேண்டும் என்ற செயல் என்றே இந்திய அரசும் மக்களும் நினைகின்றனர்,இப்பொழுது மன்னிப்பு கேட்டு விட்டாலும் இத்துடன் இதுபோன்ற செயல்களை அவர்கள் நிறுத்த போவது இல்லை                 
சரி இதற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க தோனுகிறத ,ஆம் அன்பர்களே அப்துல் கலாம் அவமானபடுத்தியது  அமெரிக்கர்கள் மட்டும் அல்ல இந்தியாவில் தன்னைதானே இவர் அவமனபடுத்திகொண்ட காட்சியை நிங்களே பாருங்கள்,காவிகளின் காலடியில் கிடக்கும் இந்த காட்சியை பாருங்கள்,பாமர இஸ்லாமியர் செய்யாத காரியத்தை கூட இந்த படித்த இஸ்லாமியர் செய்யும் காட்சியை பாருங்கள்

இதுபோன்ற சுவாமிஜிகளை தலையில் துக்கி வைத்து ஆடும் பார்ப்பனர்கள் கூட சரிக்கு சமாக அமர்ந்து  இருப்பதையும் பாருங்கள்  

  
அப்துல் கலாமை அமெரிக்கர்கள் அவமனபடுத்திவிட்டர்கள் என்று ஒரு இந்தியனாக இன்று வருந்தினேன்
தன்னை தானே அவமானம் படுத்தி கொண்ட அப்துல் கலாமை பார்த்து ஒரு இஸ்லாமியனாக அன்று வருந்தினேன்

Mohamed Rafeek Taj

Thursday, 10 November 2011

தூங்க பட்டினம் - அதிரைபட்டினம்


தமிழகத்தின் தூங்க நகரகமாக மதுரையை சொல்லுவார்கள் ஏனெனில் சில வணிக
வளாகங்கள், உணவு விடுதிகள் இரவு பகல் பாராமல் இயங்கி கொண்டு
இருக்கும்.சரி மதுரையை சொல்லுறாங்க ஒகே... இஷா தொழுகை முடிந்ததும்
அனைத்து கடையையும் இழுத்து மூடிட்டு போகிற அதிரைபட்டினத்தை அப்படி ஏன் சொல்லுரிங்க என்று உங்களின் பலர் நெஞ்சங்களில் கேள்விகள் வரக்கூடும்,ஆம் அன்பர்களே இன்று  அதிரையில் ஒவ்வொரு மனிதனையும் தூங்கவிடாமல் இருக்கும் இரு குடும்பங்களை பற்றியே எச்சரிக்கை பதிவைத்தான் நாம் பார்க்கபோகிறோம்

ஈனா கொனா,கினா கொனா என்ற இந்த இரு குடும்பங்களால் தவழும் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்வரை சொல்லமுடியாத இன்னலுக்கு ஆலக்கபட்டுள்ளர்கள், இவர்கள் யார் ? இவர்களை வளர்ப்பவர்கள் யார்? குறைந்தபட்சம் இவர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளுவது எப்படி என்றும்  பார்ப்போம்

பணக்காரன் ஏழை ,படித்தவன் பாமரன் என்று உலகத்தில் வாழும் மனித
குலத்திற்கு அருட்கொடையாக   இறைவனால் வழங்கப்பட்ட தூக்கத்தை மட்டும் அல்ல கொடிய நோய்களை பரப்பும் இந்த ஈடிஸ்,கியுலஸ் என்ற இரண்டுவகை கொசு குடும்பமே நான் ஈனா கொனா,கினா கொனா கொடியவர்கள்,இதில் கியுலஸ் வகை கொசுக்கள் அசுத்த நீர்நிலைகளில் காணபடுகிறது இது கடித்தால் பெரிய பாதிப்பு இருக்காது ஆனால் தொடர்ந்து கடிப்பதால் யானை கால் நோய் வர வாய்ப்புள்ளது,அசுத்த நீர்நிலைகளை அகற்றுவதன் மூலம் இந்த வகையான கொசுக்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்

ஆனால் மலை காலங்களில் பரவ கூடிய நோய்களான நிமோனியா, சிக்குன்குனிய,டெங்கு போன்ற பல நோயிகளை பரப்பும் ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல நீர் நிலைகளிலே உருவாகிறது அதாவது நீர் தேக்க தொட்டி,மலை நீர்கள் தேங்கி கிடக்கும் குளங்கள்,பள்ளங்கள்,பாலிதீன் பைகள்,தேங்கா சிரட்டை,பூதொட்டி, டயர்,டியூப் போன்ற பலவைகைகளில் தேங்கி கிடக்கும் மலை நீர்களில்தான் ஈடிஸ் வகை கொசுக்கள் தங்கள் முட்டைகளை இட்டு (லார்வ) உருவாக்கி  அதன் மூலம் ஒரு கொசு வெறும் நான்கு நாட்களில் பல கொசுக்களை உருவாக்குகிறது

ஆக ஒரு தேங்கா சிரட்டையில் தேங்கி கிடக்கும் மலை நீரால் நூற்று கணக்கான கொசுக்கள் உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் பேருராட்சியால் மட்டும் இந்த கொசுக்களை ஒழித்துவிட முடியாது, ஒவ்வெரு வீட்டினரும் முன்வர வேண்டும் தங்கள் வீட்டின் அருகில் தேங்கி கிடக்கும் நீர்களை அகற்றுவதால் உங்களாலும் நூற்று கணக்கான கொசுக்களை ஒழிக்கமுடியும்.. நீங்க சொல்லுறது சரிங்க கொசு பண்ணைகளான குளங்கள், பள்ளங்களை எங்களால் என்ன செய்ய முடியும்
என்று நீங்கள் கேட்க கூடும் ,நிச்சயமாக பேரூராட்சி முன்வரவேண்டும்
சமிபத்தில் கோவை மாநகராட்சியில் கம்பூசியா என்ற ஒரு வகை மீன்களை ஈடிஸ் கொசுக்களுக்கு எதிராக பயன் படுத்தியுள்ளனர் அதாவது கம்பூசியா மீன்கள் முக்கிய  உணவாக இருப்பது ஈடிஸ் கொசுக்களின் லார்வாக்கல்தான் ஆக இவ்வகை மீன்களை கொள்முதல் செய்து குளங்கள், ஏரிகள் விடப்பட்டுள்ளன அதுமட்டும் இன்றி வீடுகள் தோறும் நீர் தேக்க தொட்டிகளில் வளர்பதற்காக விநியோகிக்கபட்டு வெற்றியும் கண்டுள்ளனர்

சுகாதாரத்திற்கு முன்னுருமை கொடுப்போம் என்று சூளுரைத்த பேரூராட்சி மன்ற உருபினர்களும் தலைவர்களும் நிச்சயம் இந்த கொசுக்களுக்கு சுளுக்கு எடுக்கும் நாள் வெகுதுரம் இல்லை என்ற நம்பிக்கையுடன்

நபி(ஸல்) கூறினார்கள் சுத்தம் ஈமானில் பாதியாகும்-நூல் முஸ்லிம்

Mohamed Rafeek Taj




Tuesday, 1 November 2011

பின்னி பெடல் எடுப்பாரா திரு பிச்தை ???


ஒரு நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்றால் சிறந்த எதிர்க்கட்சி அமைய வேண்டும் என்பார்கள் , அவ்வைகையில் நமதூர் பேரூராட்சியில் தமிழகத்தின் ஆளும் கட்சியே எதிர்கட்சியாக அமைந்திருப்பதின் நன்மை / தீமையை அலசுவதே  இப்பதிவின் நோக்கம்

ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்  பொழுது அதை  எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள் அதிகார துஸ்பிரயோகம் என்று ஒதுங்குவது வழக்கம் ஆணால் மாநில அரசின் ஆதரவு உள்ள ஆதிமுகவினர் அவ்வாறு ஒதுங்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் மேலும் முழு திறனுடன் ஆளும்  தரப்பினர் மக்கள் விரோத போக்கை எதிர்க்க முடியும் என்றே நம்புகிறேன் 

இது ஒருபுறம் இருக்க சகோதரர் அஸ்லம் அவர்களின்  வெற்றியால் ஆதிமுக தரப்பின் தேர்தல் வாக்குறுதிகள் அம்பேலாகிவிட்டது என்று நினைக்கும் அதிரை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக வந்தது திரு பிச்சை அவர்கள்  துணை சேர்மனாக தேர்ந்தேடுக்கபட்டது 

ஏறக்குறைய ஆட்சியின் சமபங்கு  கிடைத்த திரு பிச்சை அவர்கள் செக்கடி மேட்டில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளார் , அதாவது பாதாள சாக்கடை, பைபர் சாலை, அல் அமீன்    பள்ளிக்கு சுமுக தீர்வு மற்றும் முதல்வர் அறிவித்த இலவச திட்டங்கள்

ஆக ஒருபக்கம் ஆளும் கட்சியினரை கண்காணிக்கும் பொறுப்பு மறுபக்கம் துணை சேர்மன் என்ற வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்ற நிலையில் இருக்கும் திரு பிச்சை ஆளும்கட்சியை விட ஒரு படி மேல் உழைக்க வேண்டிய சூழ்நிலையில் சுலபட்டுள்ளர் நம்முடைய  துணை சேர்மன்

இருப்பினும் கிரிகெட் விளையாட்டில் கூட்டுகுழு முயற்சியால் வெற்றி கிடைத்தாலும் BATSMANகே பரிசும் புகழும் கொடுக்கப்படும் அதை இவ்வாறு ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் “WHAT SO EVER CREDIT GOES TO BATSMAN”  அதுபோல் அதிமுகவின் நற்செயல்கள் திமுகவிற்கு சென்றுவிடுமோ என்ற அச்சமும் அதிமுகவிற்கு இருப்பதை அரசியல் வட்டாரங்களில்  பேசபடுகிறது

எது  எப்படியோ  அதிரையில் வளர்ந்துவரும் கட்சியான அதிமுகவை தன் நற்செயல்கள்  முலம் மக்களை கவருவதற்கு பின்னி பெடல் எடுப்பாரா அல்லது அரசியல் கல்புணர்ச்சி காரணங்களால் பின்தங்குவரா என்பதை காலம் நமக்கு  கட்டாயம் காட்டிகொடுக்கும்
Mohamed Rafeek  Taj
http://rattlerafi.blogspot.com/

Sunday, 23 October 2011

ஹசாரேவிடம் ஒரு மாணவனின் கேள்விகள்...


மாணவன் : குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்குள் லோக்பால் மசோதா கொண்டுவரவில்லை என்றால் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளீர்கள். அப்படிச் சொன்னது பத்திரிகையில் வந்துள்ளது. அது உண்மைதானா?

அன்னா : ஆம் உண்மையே.

மாணவன் : அப்படியானால் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட் டால், காங்கிரசுக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வீர்களா?

அன்னா : நான் அப்படிச் சொல்ல வில்லையே.

மாணவன் : வேறு யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?

அன்னா : அதையும் நான் சொல்லவே யில்லையே.

மாணவன் : லோக்பால் மசோதா குளிர்கால தொடருக்குள் கொண்டுவரவில்லை என் றால் அப்போது யாருக்கு வாக்களிக்கக் கேட்பீர்கள்?

அன்னா: அதையும் நான் சொல்லவில்லை.

மாணவன் : இப்போது சொல்லவில்லை, அப்படியானால் எப்போது சொல்வீர்கள்?

அன்னா : உங்கள் வாதம் குழப்பமாக உள்ளது. இந்தக் கேள்வி இப்போது வேண்டாம்.

மாணவன் : நீங்கள் இப்போது சொல்ல வில்லை என்றாலும், காங்கிரசுக்கு அடுத்த பலமான கட்சியான பிஜேபிக்கு வாக்களியுங் கள் என்று கேட்பதாகாதா? அப்படி நினைக் கலாமா?

அன்னா : அது உங்கள் “யூகம்”?

மாணவன் : நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது பெரிய பெரிய சாமியார்கள், உலகில் பல இடங்களில் கிளைகள் வைத் துள்ள கோடீஸ்வர சாமியார் களெல்லாம் வந்து உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தந்தார்களே, அதன் பொருள் என்ன?

அன்னா : நியாயத்திற்கு, தர்மத்திற்கு யார் ஆதரவு கொடுத்தால் என்ன? அவர் களாக வந்து ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு வேறு நோக்கம் இல்லை.

மாணவன் : அப்படியானால் கர்நாடக மாநில பிஜேபி கட்சி ஊழல் நடத்தியது ஊர் அறிந்த விஷயம். அதை எதிர்த்து நீங்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினால் அந்த சாமி யார்கள் வலிய வந்து உங்களுக்கு ஆதரவு தருவார்களா? அதுவும் உங்கள் வாக்குப்படி தர்மத்துக்கும் நியாயத்திற்கான போராட்ட மாகத்தானே இருக்கும்.

அன்னா : இது குதர்க்கமான கேள்வி. உள்நோக்கமான கேள்வி.

மாணவன் : அந்த சாமியார்களோடு நெருங்கி உறவு கொண்டுள்ள அத்வானி இப் போது மத்திய அரசின் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருகிறாரே. உங்களை ஆதரித்த

அந்த சாமியார்களோடு உறவு வைத்துள்ள அத்வானி இப்போது நடத்தும் ரதயாத்திரை,

உங்களின் போராட்டம்- இவற்றுக்கெல்லாம் இடையில் ஏதோ ஓர் இழை ஓடுவதாகத் தெரிகிறதே, உங்கள் கருத்து என்ன?

அன்னா : இது உங்கள் கற்பனை, மாணவராகிய நீங்கள் அதிகம் சினிமா பார்ப்பதுண்டா? உங்கள் கற்பனை சினிமா கற்பனை!

மாணவன் : இது கற்பனை அல்ல, சூழ் நிலை, சாட்சிகள், காட்சிகள் அப்படித்தான் சொல்லுகின்றன. அது சரி, நீங்கள் காந்திய வாதி. அத்வானி 1992ஆம் ஆண்டு இப்படி ஒரு ரதயாத்திரை நடத்தி இந்து, முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு ரத்தம் சிந்தி உயிர்விட் டார்கள். அதாவது மதக்கலவரத்தில் முடிந் தது, அதே வேகத்தில் பாப்ரி மசூதி இடிக்கப் பட்டது. அதே வேகத்தில் மத்திய ஆட்சி யைப் பிடித்தது. இவையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். காந்தியவாதியான நீங்கள் அதை ஆதரித்தீர்களா?

அன்னா : நான் அதை ஆதரித்தேன் என்று யார் சொன்னது?

மாணவன் : அப்படியானால் அதை எதிர்த்தீர் களா?

அன்னா : (மௌனம்)

மாணவன் : அதை எதிர்க்கவில்லை யென்றால் காந்திக்கு செய்யும் துரோக மல்லவா? நான் மாணவன். தாங்கள் எதிர்த்த தாக செய்தி ஏதும் நான் படிக்கவில்லை.

அன்னா : நீ மாணவன் இன்னும் நீ அதிகம் கற்கவேண்டும். சில விஷயங் களில் சும்மா இருப்பதே சுகம் என்பதை அறிய உனக்கு இன்னும் காலம் தேவைப் படுகிறது.

மாணவன் : மதக்கலவரத்தை எந்தக் காலத் திலும் காந்தி ஆதரித்ததில்லை. இப்போது அத்வானி ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த சக்திகள் ஆட்சியில் இருந்தபோது பல ஊழல்கள் வெளிவந்தன. கர்நாடகா விலும் இப்போது சந்தி சிரிக்கிறது. இந்த யோக்கிய சிகாமணிகள் தான் ஊழலை எதிர்த்து ரத யாத்திரை வரப்போகிறார்களாமே? ரத்த யாத்திரை நடத்தப்போகிறார்களாமே? இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

அன்னா : (மௌனம்)

மாணவன் : அல்லது எதிர்க்கிறீர்களா?

அன்னா : அன்று அத்வானி நடத்திய தேர் ஓட்டம் வேறு, இன்று அவர் வேறு பிரச் சனைக்காக தேர் ஓட்டுவதாக நீங்கள் படிக்கவில்லையா?

மாணவன் : படித்தேன். இரண்டு தேர் ஓட்டமும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் தான். பிரச்சனை வேறு வேறாக இருக்கலாம். அன்று காந்தி போற்றிய ராமனை இந்தக் கூட்டம் தங்களுக்குச் சாதகமாக தேர் ஓட்டி வேறு வடிவத்தில் பயன்படுத்திக்கொண்டது. இன்று காந்தியவாதி என்று சொல்லும் உங்களை, எந்த ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லி களம் கண்டீரோ, அந்தக் களத்தை, அதே களத்தைப் பயன்படுத்திக்கொண்டு ரதயாத்திரை என்று சொல்லி ஒரு மதவாத அரசியல்கட்சி ஆட்சியைப் பிடிக்க சூழ்ச்சி செய்கிறது. இது உங்களுக்குப் புரிய வில் லையா தாத்தா? நான் சிறியவன், அரசியல் நிறையப் படிக்காதவன். இது எனக்குப் புரிகிற போது, உங்களுக்கு எப்படிப் புரியாது போகும். சொல்லுங்கள்!

அன்னா : (அமைதி)...

மாணவன் : ஏன் அமைதியாக இருக் கிறீர்கள்? மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி யல்லவா? காந்தியைக் கொன்ற அதே கூட்டம் இப்போது காந்தியவாதி என்று சொல்லும் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. நீங்கள் எதை சிவில் சொசைட்டி என்று கூறுகிறீர்கள். ராமர் பெயரை தன் பெயரோடு சேர்த்துக்கொண்ட நாதுராம் கோட்சே, கோர்ட்டில் வாக்குமூலம் தந்தபோது, பகவத் கீதையைப் படித்த பிறகுதான் காந்தியைக் கொல்ல தைரியம் வந்தது, கொல்லவும் முடிவெடுத்தேன் என்று சொன்னது உங்களுக்குத் தெரியாதா?

அன்னா : பொடியனே! அதையெல்லாம் நீ ஏன் இப்போது பேசுகிறீர் இந்த இடத்தில் அது அவசியமில்லை.

மாணவன் : நீங்கள் காந்தியவாதியல்லவா? அத்வானி லஞ்சத்தை எதிர்த்து, ஊழலை எதிர்த்து தேர் ஓட்டம் வருவது தேவையில் லாத ஒன்று, அது ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் நோக்கம் கொண்டது. அதை நான் ஆதரிக்கவில்லையென்று சொல்ல நீங்கள் தயாரா?

அன்னா : மௌனம்...?

மாணவன் : ஏன் தயங்குகிறீர்கள்? வாழை மரம் முள்ளில் உராய்ந்தாலும், முள் வாழை மரத்தில் உராய்ந்தாலும் சேதாரம் வாழை மரத்துக்குத் தான். நீங்களே அவர்களோடு உராய்ந்தாலும், அவர்களே உங்களோடு உராய்ந்தாலும் சேதாரம் உங்களுக்குத்தான். தைரியமாக அத்வானி சூழ்ச்சியை எதிர்த்து அறிக்கை விடுங்கள்.

அன்னா : (அமைதி)....

மாணவன் : ஏன் அமைதி, ஏன் தயக்கம்? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.எஸ். பங்கு பெற்று செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்கனவே அன்னாவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார்கள் என்று வெளிப்படையாக பூனாவில் நடை பெற்ற தசரா விழாவில் பேசியிருக்கிறாரே? உங்கள் பதில் என்ன?

அன்னா : இதை நான் வன்மையாக மறுக்கிறேன். என்னை எந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். நபரும் சந்திக்கவில்லை.

மாணவன்: வாஜ்பாய் அரசு மத்தியில் ஆண்டபோது அந்த ஆட்சி பல ஊழல்களில் சிக்கித் தவித்ததே! உதாரணமாக டெலிகாம் ஊழல், சர்க்கரை இறக்குமதி ஊழல், யூடிஐ மோசடி, கேத்தன் பரேக் ஸ்டாக் மார்க்கெட் மோசடி, தெஹல்கா பத்திரிகை வெளியிட்ட ராணுவத்துறைக்கான ஆயுதம் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி ஊழல், மகாபெட்ரோல் மோசடி, நில ஊழல் - இப்படி துர்நாற்றம் வீசியதே, இவைகளெல்லாம் தங்களுக்குத் தெரியுமா? அப்பொழுதெல்லாம் நீங்கள் வெளி நாட்டில் இருந்தீரா? உள் நாட்டில் இருந்தீரா? இந்த யோக்கியர்கள் இப்போது ஆட்டுத் தோல் போர்த்திய நரியாய் ரதயாத்திரை வருகிறார்களே, அதிலும் மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து பவனி வரப் போகிறார்களே. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

அன்னா : அது அந்தக்கட்சி எடுத்த முடிவு.

மாணவன் : அதன் உள்நோக்கமென்ன? ஊழல் ஒழிய வேண்டுமென்ற எண்ண மில்லை. நீங்கள் போராடி, உண்ணாவிரதம் இருந்து ஒரு பகுதி மக்களைத் திரட்டினீர்களே. அதிலும் சில அறிவு ஜீவிகளையும், மத்தியதர வர்க்கத்தையும் திரட்டினீர்களே. அதில் ஆதாயம் தேடி அரசியல் லாபம் சம்பாதிக்கும் பச்சையான மோசடி என்று எனக்கு, சிறுவனாகிய எனக்குப் புரிகிறது? உங்களுக்குப் புரியவில்லையா?

அன்னா : (மௌனம்)...

மாணவன் : ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்னைப் போன்ற கோடானு கோடி மாணவர்களுக்கு உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது என நான் கவலையோடு தெரிவிக்கிறேன். என் மீது நீங்கள் வருத்தப்படக்கூடாது.

அன்னா : நீங்கள் பேசுவது ஒரு மாணவனிடமிருந்து வரும் வாதமாகத் தெரிய வில்லை. ஓர் அரசியல்வாதி உள் நோக்கத்தோடு பேசுவதுபோல் இருக்கிறது.

மாணவன் : இப்படி நீங்கள் பேசுவது உங்களின் போக்கை மறைப்பதற்கு பயன்படுத்தும் ஒரு மலிவான வாதம், அவ்வளவே.! இது ரத யாத்திரையா அல்லது ரத்த யாத்திரையா? ரதயாத்திரை ஊழலை ஒழித்திடுமா? மாறாக மத ஆத்திரத்தை மூட்டவே செய்யும். ரத்தம் சிந்தச் செய்யும். சிந்தியுங்கள். வருகிறேன்...
கற்பனை : தே.இலட்சுமணன்
(நன்றி தீக்கதிர்)

Mohamed rafeek

Friday, 21 October 2011

சங்கத்திற்கு சம்மட்டி அடியா ???


   நிச்சயமாக விசுவாசிகள் யாவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தை)யும் நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹவுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். (அல்குர்ஆன் 49:10)

அன்பிற்குரிய அதிரை மக்களே

வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லும் இந்த நாட்டில் வாக்கு கொடுத்தவனின் வாக்கை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று சொல்லுவது இல்லை, வேட்பாளர்களுக்கு வக்காளத்து கேட்டு வரும் எவரும் நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என்று கேட்பதும் இல்லை இது போன்ற சூழ்நிலையில்  தமிழகம் சந்தித்த உள்ளாச்சி தேர்தலில் இதற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் அதிரை மக்களின் கொந்தளிப்பின் காரணமாக அந்த மக்களால் நடத்தப்படும் சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களின் ஆதரவுடன் வேட்பாளர்களை தாமே நிறுத்துவது என்றும் தவறுகள் செய்தால் தட்டி கேட்போம் அல்லது பதவியை விட்டு விலகசொல்வோம் என்றல்லாம் சொல்லி வேட்பாளர்களை நிறுத்தியது, அரசியல் கட்சிகளே அடி போகும் அளவுக்கு பெருபான்மையான மக்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் , அதில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்

குறிப்பாக என்னுடன் சேர்ந்து சில சகோதர்கள் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும் முறையை தவறு என்று பல முறை இணையத்தில் எடுத்து வைக்கபட்டது, பொதுவாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அவர்களுடன் நேர்காணல் வைத்து வெற்றி வாய்ப்பினை அடிப்படையாக வைத்து தேர்ந்து  எடுக்கபடுவார்கள், ஆனால் எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் சங்க தேர்வாளர்கள் வேட்பாளர்களை எதோ சங்க பதவிக்கு தேர்ந்து எடுப்பது போல் குழுக்கள் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள் முடிவில் பெருபான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்தித்தனர் குறிப்பாக வெற்றி வேட்பாளர்கள் சங்கத்தை தேடி வந்தும் தேர்ந்து எடுக்கும் முறையை காட்டி வாய்புகள் மறுக்கப்பட்டதில் பலர் வேதனை அடைந்தனர்

ஹைர் முடிவில் தேர்ந்து எடுக்க பட்ட அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே ஆனால் அவர்கள் எல்லோரும் சங்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும் (இன்ஷா அல்லாஹ் )....,

சங்கத்திற்காக மக்களா அல்லது மக்களுக்காக சங்கமா என்று கேள்வி எழுந்தால் நிச்சயம் மக்களுக்காக சங்கம் என்பதைத்தான் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்பதற்கு இணங்க இனி வரும் காலங்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை சங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையுடன்

சங்கத்தின் வெற்றி அச்சங்கத்தின் அங்கத்தினரின் வெற்றி
சங்கத்தின் தோல்வி அச்சங்கத்தின் அங்கத்தினரின் தோல்வி

ஆக சங்கம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொல்லுபவர்கள் தங்களை தானே இழிவுபடுத்தி கொள்பவர்கள் என்று சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்

குறிப்பு :

மனிதர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வெறுப்புக்குள்ளான இதயங்களுக்கிடையில் பிரியத்தை ஏற்படுத்தவும் மிகைப்படுத்திப் பேசுவது பொய்யாக கருதப்படாது, பேசுபவரும் பொய்யராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Mohamed Rafeek Taj

Saturday, 17 September 2011

இவருக்குத்தான் என் ஒட்டு



அறுபது லட்சம் செலவு செய்து சேர்மன் ஆவேன் , !!!
ஆளும்கட்சியில் காசை கொடுத்து சீட்டு வாங்கி சேர்மன் ஆவேன் !!!
குடும்பத்தின் பெயரை வைத்தே சேர்மன் ஆவேன் !!!
அதிரை எங்க கட்சி கோட்டை அதைவைத்தே சேர்மன் ஆவேன் !!!

இப்படி பிரதான வேட்பாளர்கள் சொலிக்கொண்டு இருக்கும் தருணத்தில் நான் யாருக்கு ஒட்டு போடுவேன் தெரியுமா ???

அதிரையில் பல சமுக பிரச்சனயில் கண்டு கொள்ளபடாத முக்கிய பிரச்னை பிளாஸ்டிக் குப்பைகள் பெருகிவருவது, இன்று உலகமே பிளாஸ்டிக் குப்பைகளாக மாறி வருவதை விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துவருகின்றனர், வானம்  பார்த்த பூமியான அதிரையில் அதைபற்றிய விழிப்புணர்வு சற்றும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை , மனிதர்கள் , வனவிலங்குகள் ,காடு ,நிர் அதாரம்,விவசாயம் இப்படி பிளச்டிகால் அழிந்து வருவதை அடிக்கு கொண்டே போகலாம் உதாரணமாக மனிதர்கள்ளுக்கு எப்படி கேடு விளைவிகிறது என்று பார்ப்போம்


மனிதர்களுக்கு ஆபத்து : சமீபகாலமாக, ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சால்னா  போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிகிறது 
பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது. இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகள், ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரி பேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

இப்படி பிளச்டிக்னால் ஏற்படும் அழிவுகளை உலகம் கவனித்து அதை தடை செய்யும் இந்த தருணத்தில், அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டுவரமுடியுமா , அது யாரால் முடியும் ? சட்டம் இதை பற்றி என்ன சொல்லுகிறது 

தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

அக பிளாஸ்டிக் தடை  அதிரையில் அமல்படுத்தினால் அதை எதிர்த்து எவரும் எந்த நிதி மன்றத்துக்கும் போக முடியாது..,

தில்லி சரி சென்னை உயர்நிதிமன்றம் இந்த தடையை பற்றி என்ன சொல்லுகிறது 

சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.  சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :-  உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சுழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன.  தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும்.  முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன.  ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும். மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.  சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.  - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009. அக எந்த ஒரு சட்டமும் அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டு வருவதற்கு எந்த சட்டமும் எதிராக இல்லை என்பதை தக்க சான்றுடன் விளக்கியுள்ளேன்

இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.  இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் விருப்பம் 

புதிதாக தேர்ந்து எடுக்கப்படும் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிரையில் பிளாஸ்டிக் தடையை அமுல்படுத்த வேண்டும் .., அதை தேர்தல் வாக்குறுதியாக எவர் தருகிறாரோ  அவருக்குதான் என் ஒட்டு என்று அதிரை மக்கள் மனதில் திர்மானம் நிறைவேற்றவேண்டும் 

இந்த வாக்குறுதியை யார் தருகிறாரோ அவர்க்கு எங்கள் குடும்பத்தின் உள்ள பெண்களிடம் சொல்லி குறைந்தது ஓட்டுகளை எனது சார்பாக வாங்கி தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்