Saturday, 17 September 2011

இவருக்குத்தான் என் ஒட்டு



அறுபது லட்சம் செலவு செய்து சேர்மன் ஆவேன் , !!!
ஆளும்கட்சியில் காசை கொடுத்து சீட்டு வாங்கி சேர்மன் ஆவேன் !!!
குடும்பத்தின் பெயரை வைத்தே சேர்மன் ஆவேன் !!!
அதிரை எங்க கட்சி கோட்டை அதைவைத்தே சேர்மன் ஆவேன் !!!

இப்படி பிரதான வேட்பாளர்கள் சொலிக்கொண்டு இருக்கும் தருணத்தில் நான் யாருக்கு ஒட்டு போடுவேன் தெரியுமா ???

அதிரையில் பல சமுக பிரச்சனயில் கண்டு கொள்ளபடாத முக்கிய பிரச்னை பிளாஸ்டிக் குப்பைகள் பெருகிவருவது, இன்று உலகமே பிளாஸ்டிக் குப்பைகளாக மாறி வருவதை விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துவருகின்றனர், வானம்  பார்த்த பூமியான அதிரையில் அதைபற்றிய விழிப்புணர்வு சற்றும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை , மனிதர்கள் , வனவிலங்குகள் ,காடு ,நிர் அதாரம்,விவசாயம் இப்படி பிளச்டிகால் அழிந்து வருவதை அடிக்கு கொண்டே போகலாம் உதாரணமாக மனிதர்கள்ளுக்கு எப்படி கேடு விளைவிகிறது என்று பார்ப்போம்


மனிதர்களுக்கு ஆபத்து : சமீபகாலமாக, ‘கேரிபேக்’கில் சுடச்சுட உணவுகளை பார்சல் பண்ணி கொடுக்கின்றனர். சால்னா  போன்றவைகளையும் சிறிய பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலதீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப்பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிகிறது 
பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது. இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலிதீன் பைகள், ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரி பேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.

இப்படி பிளச்டிக்னால் ஏற்படும் அழிவுகளை உலகம் கவனித்து அதை தடை செய்யும் இந்த தருணத்தில், அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டுவரமுடியுமா , அது யாரால் முடியும் ? சட்டம் இதை பற்றி என்ன சொல்லுகிறது 

தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

அக பிளாஸ்டிக் தடை  அதிரையில் அமல்படுத்தினால் அதை எதிர்த்து எவரும் எந்த நிதி மன்றத்துக்கும் போக முடியாது..,

தில்லி சரி சென்னை உயர்நிதிமன்றம் இந்த தடையை பற்றி என்ன சொல்லுகிறது 

சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.  சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :-  உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். சுற்றுச்சுழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன.  தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும்.  முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன.  ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும். மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும்.  சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.  - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009. அக எந்த ஒரு சட்டமும் அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டு வருவதற்கு எந்த சட்டமும் எதிராக இல்லை என்பதை தக்க சான்றுடன் விளக்கியுள்ளேன்

இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது.  இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் விருப்பம் 

புதிதாக தேர்ந்து எடுக்கப்படும் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிரையில் பிளாஸ்டிக் தடையை அமுல்படுத்த வேண்டும் .., அதை தேர்தல் வாக்குறுதியாக எவர் தருகிறாரோ  அவருக்குதான் என் ஒட்டு என்று அதிரை மக்கள் மனதில் திர்மானம் நிறைவேற்றவேண்டும் 

இந்த வாக்குறுதியை யார் தருகிறாரோ அவர்க்கு எங்கள் குடும்பத்தின் உள்ள பெண்களிடம் சொல்லி குறைந்தது ஓட்டுகளை எனது சார்பாக வாங்கி தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்