நிச்சயமாக விசுவாசிகள் யாவரும் சகோதரர்களே! ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தை)யும் நிலை நிறுத்துங்கள். (இதில்) அல்லாஹவுக்குப் பயந்து நடங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைவீர்கள். (அல்குர்ஆன் 49:10)
அன்பிற்குரிய அதிரை மக்களே
வாக்களிப்பது ஜனநாயக கடமை என்று சொல்லும் இந்த நாட்டில் வாக்கு கொடுத்தவனின் வாக்கை நிறைவேற்ற வேண்டியது கடமை என்று சொல்லுவது இல்லை, வேட்பாளர்களுக்கு வக்காளத்து கேட்டு வரும் எவரும் நீங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்கு என்னாச்சு என்று கேட்பதும் இல்லை இது போன்ற சூழ்நிலையில் தமிழகம் சந்தித்த உள்ளாச்சி தேர்தலில் இதற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழகத்தில் தென்கோடியில் இருக்கும் அதிரை மக்களின் கொந்தளிப்பின் காரணமாக அந்த மக்களால் நடத்தப்படும் சம்சுல் இஸ்லாம் சங்கம் மக்களின் ஆதரவுடன் வேட்பாளர்களை தாமே நிறுத்துவது என்றும் தவறுகள் செய்தால் தட்டி கேட்போம் அல்லது பதவியை விட்டு விலகசொல்வோம் என்றல்லாம் சொல்லி வேட்பாளர்களை நிறுத்தியது, அரசியல் கட்சிகளே அடி போகும் அளவுக்கு பெருபான்மையான மக்களும் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர் , அதில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்
குறிப்பாக என்னுடன் சேர்ந்து சில சகோதர்கள் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படும் முறையை தவறு என்று பல முறை இணையத்தில் எடுத்து வைக்கபட்டது, பொதுவாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்து எடுக்கும் பொழுது அவர்களுடன் நேர்காணல் வைத்து வெற்றி வாய்ப்பினை அடிப்படையாக வைத்து தேர்ந்து எடுக்கபடுவார்கள், ஆனால் எந்த ஒரு முறையையும் பின்பற்றாமல் சங்க தேர்வாளர்கள் வேட்பாளர்களை எதோ சங்க பதவிக்கு தேர்ந்து எடுப்பது போல் குழுக்கள் முறையில் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்க பட்டார்கள் முடிவில் பெருபான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி பெற்றனர் மற்றவர்கள் தோல்வியை சந்தித்தனர் குறிப்பாக வெற்றி வேட்பாளர்கள் சங்கத்தை தேடி வந்தும் தேர்ந்து எடுக்கும் முறையை காட்டி வாய்புகள் மறுக்கப்பட்டதில் பலர் வேதனை அடைந்தனர்
ஹைர் முடிவில் தேர்ந்து எடுக்க பட்ட அனைவரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு உட்பட்டவர்களே ஆனால் அவர்கள் எல்லோரும் சங்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும் (இன்ஷா அல்லாஹ் )....,
சங்கத்திற்காக மக்களா அல்லது மக்களுக்காக சங்கமா என்று கேள்வி எழுந்தால் நிச்சயம் மக்களுக்காக சங்கம் என்பதைத்தான் அனைவரும் ஏற்று கொள்வார்கள் என்பதற்கு இணங்க இனி வரும் காலங்களில் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களை சங்கம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையுடன்
சங்கத்தின் வெற்றி அச்சங்கத்தின் அங்கத்தினரின் வெற்றி
சங்கத்தின் தோல்வி அச்சங்கத்தின் அங்கத்தினரின் தோல்வி
ஆக சங்கம் தோல்வி அடைந்துவிட்டது என்று சொல்லுபவர்கள் தங்களை தானே இழிவுபடுத்தி கொள்பவர்கள் என்று சொல்லி இப்பதிவை நிறைவு செய்கிறேன்
குறிப்பு :
மனிதர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், வெறுப்புக்குள்ளான இதயங்களுக்கிடையில் பிரியத்தை ஏற்படுத்தவும் மிகைப்படுத்திப் பேசுவது பொய்யாக கருதப்படாது, பேசுபவரும் பொய்யராக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
Mohamed Rafeek Taj
No comments:
Post a Comment