Sunday, 23 September 2012

சவூதி மானம் காத்த மன்னர் அப்துல்லாஹ் ...

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் திரைக்கு பின்னால்  இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பின் தொடபு வெளிப்பட்டுள்ளது "இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா" என்பது போல் மொசாத் மிண்டும் இஸ்லாமியர்களுக்கு எதிரான சதிவலையை பின்னியுள்ளது ,  இத்திரைப்படத்தை தயாரித்த  பசிலி .கலிஃபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச் சார்ந்தவன் ,கிறிஸ்தவ-யூத அமைப்புகளின் உதவியுடன் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னர் செய்திகள் வெளிவந்தன.

இஸ்லாம் ஓர் புற்றுநோய் என்றும், முஹம்மது நபியை மோசமாக சித்தரித்தும் பசிலி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் பசிலி என்பவன் போலி என்றும், இது ஒரு போலியான தகவல் என்றும் கூறி இத்திரைப்படத்தின் கன்ஸல்டண்ட் என கூறும் ஸ்டீவ் க்ளீன் என்பவர் AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55 வயதான நபருக்கு, பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம் இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால், பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.

  ‘innocence muslims’ என்ற திரைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால், எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ விஷமி ஒருவன், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர் ,இஸ்ரேல் நினைத்து செய்தது தற்போது நடந்துள்ளது. உலகம் முழுவதும் இஸ்ரேலின் (மொசாத்) தீவிரவாத அமைப்பு அனைத்து காரியங்களும் செய்து கொண்டு வருகிறது என்பதை வரும் நாட்களில் உலகம் அறியும்.

இதற்கிடையில்  மன்னர் அப்துல்லாஹ் இவ்விவகரத்திலும் காலம் தாழ்த்தி மவுனம் கலைத்துள்ளார்,இந்த திரைப்படத்தை அகற்றுமாறு சவூதி மன்னர் அப்துல்லா கூகிள் நிறுவனத்திடம் கோரியுள்ளார். கூகிள் அதனை செய்ய தவறினால் யூடியுப் இணையத்தளம் சவூதியில் முழுமையாக முடக்கப்படும் என சவூதியின் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது,ஆட்சி அதிகரபிடத்தில் அமர்ந்திருக்கும் மற்ற இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆழ்ந்த தூக்கம்  மன்னர் அப்துல்லாவின் கோரிக்கை தட்டி எழுப்பும் என்று நம்பபடுகிறது

Friday, 30 December 2011

லோக்பால் RSS /BJP மற்றும் ஆளும்வர்கத்தின் செல்லபில்லையா !?

லோக்பலை பற்றிய என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு முன் லோக்பால் என்றால் என்ன என்பதை பார்போம்? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.

ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது

பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம்  லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்

டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை  தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது

ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான்  நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது

இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா  பேச முன்வரவேண்டும்