Friday, 30 December 2011

லோக்பால் RSS /BJP மற்றும் ஆளும்வர்கத்தின் செல்லபில்லையா !?

லோக்பலை பற்றிய என்னுடைய கருத்தை சொல்லுவதற்கு முன் லோக்பால் என்றால் என்ன என்பதை பார்போம்? அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.

ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் ஆனால் நேற்று மாநிலங்கள் அவையில் டாக்டர் அபிசேக் மனு சிங்வி பேசிய பிறகுதான் எனக்கு தெரிந்தது ஜன் லோக்பால் என்று உருவாக்கப்பட்ட அதாவது டீம் அண்ணா மற்றும் சங்பரிவார் கூட்டுசதியால் உருவாக்கப்பட்ட ஜன் லோக்பால் முலம் இந்திய நாட்டின் பீடைகளான உயர்சாதியினர் கொல்லைபுரமாக அதாவது ஜன் லோக்பால் என்ற ஆயுதத்தை வைத்து கொண்டு இந்த நாட்டை மறைமுகமாக ஆழ முன்வந்து இருப்பது

பிஜேபி சேர்ந்த அருண்ஜெட்லியின் வாதத்திற்கு மறுவாதத்தின் பொது டாக்டர் சிங்வி இவ்வாறு சொன்னார் லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ,சிவிஜி,குடிமக்கள் சாசனம் எல்லவற்றையும் லோக்பால் கிழ் கொண்டுவரவேண்டும் அத்துடன் விசாரணை,புலனாய்வு,குற்றஞ்சாட்டுதல்/வழக்குத் தொடர்தல் என்று அனைத்தும் வரவேண்டும் கடவுளுக்கு நன்றி பிஜேபி திர்ப்பும் லோக்பலே சொல்லவேண்டும் என்று சொல்லவில்லை என்றார் மேலும் அவர் பேசுகையில் பிரதமர் அலுவலகம்  லோக்பலுக்கு முன் அதாவது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர் அலுவலகம் மிகவும் சிறிய பிராணியை போல் இருக்கும் என்றார்

டீம் அண்ணா மற்றும் சங்க்பரிவாரர்களால் முழங்கப்படும் ஜன் லோக்பால் நிரவேற்றபட்டால் தேர்ந்து எடுக்கப்படும் லோக்பால் எட்டு தலைவர்கள் இந்த நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்வார்கள் (அதிகாரவர்கத்தில் புல்லுருவி பூனல்களை  தவிர வேறு யார் இருக்கிறார்கள் தேர்ந்து எடுக்க படுவதற்கு) இதுதான் இவர்களின் சதித்திட்டம் என்பதை டாக்டர் சிங்வி அவர்களின் பேச்சால் என்னால் மட்டும் அல்ல ஏனைய நடுநிலை இந்தியர்களாலும் இந்த சதித்திட்டம் உணரப்பட்டது

ஆதரிப்பவர்கள் சொல்லலாம் அதுதான் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளதே என்று, அந்த பொய்யை தவளை தன் வாயால் கெடுவது போல் டாக்டர் சிங்வி போட்டு உடைத்தார் நாங்கள் ரேசெர்வேசன் கொண்டு வரவில்லை ரெபெர்செண்டசன் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதாவது சிறுபான்மையினர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று எந்த ஒரு சரத்தும் சொல்லவில்லை என்றார்,அதனால் தான்  நாராயனஸ்வமியின் அறிக்கையை லல்லுவின் எம்பி சபையில் கிழத்தாரோ என்னோவோ,வெறும் நான்கு எம்பி வைத்திருக்கும் லல்லுவை லோக்பலுக்கு எதிரான சதிகாரர் என்று மிடியாக்கள் சொல்லுவது நகைப்புக்குரியது

இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா  பேச முன்வரவேண்டும்

5 comments:

  1. வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.

    ReplyDelete
  2. சங்க் பரிவார் சொன்னா என்ன பிஜே பி சொன்னா என்னா....மோசமான ஊழலை ஒழிக்க வேண்டும்...அதுக்கு ஒரு சட்டம் எடுத்துட்டு வரணும்னு நினைக்குறதுல தப்பில்ல.....

    "ஆஹா இது ஒரு அருமையான சட்டம்,இதை எதிர்பவர்கள் தேச துரோஹி,அண்ணா ஹசாரே தேச தந்தையின் மறுவடிவம் என்றெலாம் பாமர இந்தியனை போல நானும் தலையசைத்து ஏற்றுக்கொண்டேன் "

    ஹிஹி...உலக மகா பொய்னு உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கீங்க...நீங்க அக்டோபர் மாதம் எழுதின பதிவை இங்க போய் பாருங்க சார்..

    "ஹசாரேவிடம் ஒரு மாணவனின் கேள்விகள்..."

    இஸ்லாமியர்கள் இதுக்கு சப்போர்ட் பண்ணமாட்டாங்க......அவங்க சமய சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு மட்டும் தான் போர்க்கொடி தூக்குவாங்கன்னு உலகுக்கே தெரியும் சார்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //ஹிஹி...உலக மகா பொய்னு உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கீங்க...நீங்க அக்டோபர் மாதம் எழுதின பதிவை இங்க போய் பாருங்க சார்..//
    தீ கதிரில் வெளியான இப்பதிவிற்கு பிறகுதான் ஹசாரே இந்திய நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் என்று நினைத்து இருந்த என் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது இதை என்போன்ற கருத்துடையை மற்ற நண்பர்களுக்கும் தெரிவிபதர்க்காக அப்பதிவை மீள் பதிவு செய்தேன்

    டாக்டர் அபிசேக் மனு சிங்வி அவர்களின் மாநிலங்கள் அவையின் உரைக்கு பிறகே ஹசறேவின் கூட்டுசதி முழுமையாக எமக்கு தெரியவந்தது

    //மோசமான ஊழலை ஒழிக்க வேண்டும்...அதுக்கு ஒரு சட்டம் எடுத்துட்டு வரணும்னு நினைக்குறதுல தப்பில்ல.....//
    தப்புன்னு நான் சொல்லவே இல்லையே ..பதிவை தாங்கள் முழுமையாக படிக்க வில்லை என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம் ...மிண்டும் இதை படியுங்கள்
    ///இறுதியாக அராஜக (Anarchy) லோக்பாலை தவிர்த்து மக்கள் ஆட்சிக்கு உட்பட்ட லோக்பால் உருவாக்கப்படவேண்டும்,லோகயுக்தவை பற்றி டீம் அண்ணா பேச முன்வரவேண்டும் ///

    இன்னும் தெளிவாக சொல்லுகிறேன் கேளுங்கள்
    இடது சாரிகள் சொல்லுவது போல் corprate நிறுவனங்களை உள்ளடிக்கிய லோக்பால் வேண்டும்
    காங்கிரஸ் சொல்லுவது போல் மக்கள் ஆட்சியை மிஞ்சிய அதிகாரம் படைத்த லோக்பால் வேண்டாம்

    1000 கோடிகளுக்கு மேல் சொத்து குவித்து இருக்கும் தொண்டு நிறுவனங்கள் தன்னுடைய வரம்புக்குள் உள்ளடக்கிய லோக்பால் வேண்டும் (பாபா ராம்தேவ் முன்வருவார)
    ஆதிக்க சக்திகள் கொல்லைபுரமாக இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு ஏதுவான லோக்பால் வேண்டாம்

    //இஸ்லாமியர்கள் இதுக்கு சப்போர்ட் பண்ணமாட்டாங்க//
    தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்தை பதிவு செய்தேன் உடனே ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் தொடர்பு படுத்தி உள்குத்து குத்துவதில் தினமலரை விட உயர்ந்தவன் என்று தாங்களை காட்டிவிட்டிர்கள் வாழ்த்துக்கள்

    //அவங்க சமய சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு மட்டும் தான் போர்க்கொடி தூக்குவாங்கன்னு உலகுக்கே தெரியும் சார்//
    இந்திய விடுதலைக்காக போராடிய இஸ்லாமியர் வரலாறையும்
    சமிபத்தில் நடந்த ஹசாரே போராட்டத்துக்கு தமிழகத்தில் தலைமை தாங்கிய ஜாகிர் என்பவர் இஸ்லாமியர் என்றால் நீங்கள் நம்பவா போறீங்க http://newstodaynet.com/newsindex.php?id=27536%20&%20section=5

    ReplyDelete
  5. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1.
    புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
    ***********************************


    2. *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1

    மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    .

    ReplyDelete